×

நியுமோகாக்கல் தடுப்பூசி போடாததால் கடந்த 2 ஆண்டுகளில் நிறைய குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: திமுக ஆட்சியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் தடுப்பூசிகள் இலவசமாக  செலுத்துவது குறித்து தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம் இன்று கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்: தற்போது 6,56,510 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. 1 கோடியே 91 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. 1 கோடியே 88 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 7.5 லட்சம் தடுப்பூசி கூடுதலாக போடப்பட்டுள்ளது. 137 மருத்துவமனையை சேர்ந்த நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். 20 க்கும் மேற்பட்ட வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. ஜிகா வைரஸ் தமிழகத்திற்கு வராமல் இருப்பதற்கு தமிழக எல்லை பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நியுமோகாக்கல் தடுப்பூசி போடாததால் கடந்த 2 ஆண்டுகளில் நிறைய குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.இதற்காக நிமோனியா தடுப்பூசி போடும் பணி தமிழகம் முழுவதும் தொடங்கி இருக்கிறோம்.  திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை. சிஎஸ்ஆர் நிதி மூலம் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்த ரூ.2.17 கோடி நிதி கிடைத்துள்ளது,என்று தெரிவித்துள்ளார்.


Tags : Minister ,Ma Subramanian , ஆக்சிஜன் பற்றாக்குறை
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...