×

வேலூர் பிஎஸ்எஸ் கோயில் தெருவில் ஆபத்தான பள்ளங்களை சீரமைக்க வணிகர்கள் கோரிக்கை

வேலூர்: வேலூர் பிஎஸ்எஸ் கோயில் தெருவில் உயிருக்கு ஆபத்தான பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  வேலூர் பிஎஸ்எஸ் கோயில் தெருவில் துணிக்கடைகள், பாத்திரைக்கடைகள் உட்பட நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளது. இப்பகுதியில் தினசரி ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பாதாளச்சாக்கடை திட்டத்திற்காக அப்பகுதி முழுவதும் பள்ளம் தோண்டப்பட்டது.

ஆனால் அந்த பள்ளங்களை மூடாமல் விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பெய்யும் மழைகாரணமாக அப்பகுதி முழுவதும் சேறும் சகதியும் நிறைந்து காணப்படுகிறது. மேலும் அவ்வழியாக செல்வோர் சேற்றில் வழுக்கி விழுந்து காயமடைவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகளும், அவ்வழியாக சென்றுவர முடியாமல் வாடிக்கையாளர்களும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒருவர் கால்வாயில் தவறி விழுந்துள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாததால் ஒரே தெருவில் சுமார் 8 இடங்களில் கம்பிகள் சாலையில் நீட்டியபடி ஆபத்தான பள்ளங்கள் உள்ளன. எனவே பள்ளங்களை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vallur BSS Temple Street , Vellore, merchants, demand
× RELATED போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை...