×

தொலைபேசி ஒட்டுகேட்பு என்பது ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்க உரிமையில் தலையிடுவதாகும் : திருச்சி எம்.பி.சிவா சாடல்

டெல்லி : பெகாசஸ் மென்பொருள் ஒட்டுக்கேட்பு விவகாரத்திற்கு கடும் கண்டனம்  தெரிவித்து திமுக, காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எதிர்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள், மத்திய அரசுக்கு எதிராக எதிர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி எம்.பி.சிவா, தொலைபேசி ஒட்டுகேட்பு என்பது ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்க உரிமையில் தலையிடுவதாகும் என்று குறிப்பிட்டார்.

எனவே இந்த விவகாரத்தில் எதிர்ப்பையும் கண்டனங்களையும் எதிர்கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் மூலம் மத்திய அமைச்சர்கள், முக்கிய எதிர்க்கட்சிகள் தலைவர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோரின் தொலைபேசிகள் ஒட்டுகேட்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கிறது. மழைக்கால கூட்டத்தொடரில் 3 நாள் கூட்டம் முடங்கிய நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Tags : Trichy MP Siva Satal , திருச்சி எம்.பி.சிவா
× RELATED பெரும் தொழிலதிபர்களுக்கு கடன்...