×

திருப்பதி ஏழுமலையான் கோயிலை பாதுகாக்க ரூ.25 கோடி செலவில் ட்ரோன் தடுப்பு தொழில்நுட்பம்

திருப்பதி: புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலை பாதுகாக்க 25 கோடி ரூபாய் செலவில் ட்ரோன் தடுப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜம்முவில் உள்ள விமான படைத்தளத்தில் கடந்த மாதம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் முக்கிய இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கான கண்காணிப்பை தீவிரப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ட்ரோன் தடுப்பு தொழில்நுட்பம் குறித்து கடந்த 6ஆம் தேதி கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் செயல்முறை விளக்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. புதிய அமைப்பின் மூலம் கண்டறிதல் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஒரு ட்ரோன் தடுப்பு தொழில்நுட்ப அமைப்பை உருவாக்க 25 கோடி ரூபாய் வரை செலவு பிடிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் 200 அமைப்புகளுக்கு மேல் கொள்முதல் செய்தால் தலா 22 கோடி ரூபாய்க்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்திருக்கும் இந்த ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

Tags : Tirupati Ezhumalayan temple , tirupati, drone
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோவிலில்...