×

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பள்ளம் தோண்டி குப்பைகள் புதைப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கடலூர்:  கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் நகராட்சி தரப்பில் சேகரிக்கப்படும் குப்பை  குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது. இதனால் நகர மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி  உள்ளனர். கடலூர் நகராட்சி பகுதியில் 45 வார்டுகள் உள்ளது. தினந்தோறும்  80 டன் வரை குப்பை சேகரிக்கப்படுகிறது. பிரதானமாக குப்பைகளை தரம் பிரித்து  அப்புறப்படுத்துவதற்காக முதுநகர் பகுதியில் குப்பை கிடங்கு இயங்கி  வருகிறது. மேலும் கூடுதலாக குப்பை கிடங்கு அமைப்பதற்கான நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடலூர் நகராட்சி பகுதியின் முக்கிய  இடமாக உள்ள மஞ்சக்குப்பம் மைதானத்தில் நகராட்சி தரப்பினரால் குப்பைகள்  கொட்டப்பட்டு பின்னர் அவை குழி தோண்டி புதைக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற  நடவடிக்கையால் கடலூர் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.  நகரின் பிரதான  பகுதி என்ற நிலையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்லும் வழி என்ற  நிலையிலும் மைதான பகுதியிலேயே குப்பை புதைக்கப்படுவது பல்வேறு பாதிப்புகளை  ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். எனவே போர்க்கால  அடிப்படையில் இது போன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை  மேற்கொள்வதுடன் சம்பந்தப்பட்ட மைதான பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க  வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Cadalur Lunch Ground , Cuddalore, Manjakuppam Ground
× RELATED மே 5-ம் தேதி வணிகர்கள் தினம்; செங்கல்பட்டில் கடைகள் அடைப்பு!