விலங்குகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் மெய்நிகர் வனவிலங்கு காட்சி சாலை : அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி

வாஷிங்டன் : அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் திறக்கப்பட்டுள்ள மெய்நிகர் வனவிலங்கு காட்சி சாலை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு வனவிலங்கு காட்சி சாலைகளும் பூங்காக்களும் மூடப்பட்டு உள்ள நிலையில், அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று புதுமையான திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அட்லாண்டா நகர் மையத்தில் 30,000 சதுர கிமீ பரப்பளவில் இலுமினாரியம் எனப்படும் மெய்நிகர் வனவிலங்கு காட்சி சாலை திறக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் சுமார் 20 அடிக்கு சுவர் எழுப்பப்பட்டு அதில் ப்ரொஜெக்டர் மூலம் வனப்பகுதியில் வனவிலங்குகள் உலாவும் காட்சிகள் போடப்படுகின்றன.

சிங்கங்கள் சண்டையிடுவதும் ப்ளமிங்கோ பறவைகள் பறப்பதும் ஒட்டகச்சிவிங்கிகள் உணவை உண்பதும் நிஜத்தில் வனவிலங்கு காட்சி சாலையில் விலங்குகளின் அருகிலேயே நின்று பார்ப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. அரங்குகள் இருந்தபடி வனவிலங்குகளை காணொளி வாயிலாக ரசிப்பது, புதுமையான அனுபவத்தை அளிப்பதாக பார்வையாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மக்களிடையே இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் தொடர்ந்து பல நாடுகளில் மெய்நிகர் வனவிலங்கு காட்சி சாலையை திறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

Related Stories:

>