×

அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: ஒரே நாளில் 61,651 பேர் பாதிப்பு, 365 பேர் உயிரிழப்பு..!!

வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா பரவல் 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியாவில் தொற்று அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,651 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 365 உயிரிழப்புகளும் பதிவாகி இருக்கின்றன. இதுவரை 3 கோடியே 52 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவில் தொற்று மீண்டும் அதிகரிக்க டெல்டா வகை வைரஸே காரணம் என்று அந்த நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து லூசியானா டாக்டர் கேத்தரின் தெரிவித்ததாவது, டெல்டா வகை வைரஸ் வேகமாக பரவக்கூடியது. முந்தைய வகை வைரஸை விட பரவும் தன்மை ஆயிரம் மடங்கு அதிகம் என்று கூறலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் மனிதர்களை கூட டெல்டா வைரஸ் அதிகம் பாதிக்கும் என்று ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குழந்தைகளிடமும் பரவ தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். அமெரிக்காவுக்கு அடுத்ததாக தினசரி தொற்று பிரேசில் மற்றும் இந்தோனேசியாவில் அதிகரித்துள்ளது. இரு நாடுகளிலும் 24 மணி நேரத்தில் தலா 50,000 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3,000 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனிலும் நேற்று 40,000 தினசரி தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனா பரவலின் 2ம் அலை தீவிரமடைந்து வருகிறது.

அதிகம் தொற்றுள்ள நாடுகளின் அட்டவணையில் இந்தியா 2வது இடத்தில் இருந்தாலும் தினசரி தொற்று 40,000த்திற்கும் கீழாக உள்ளது. தொற்று அதிகரித்ததற்கு அதிவேகமாக பரவும் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸே காரணம் என்பதால் பொதுவெளியில் பொதுமக்கள் தவறாமல் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன், இந்தோனேசியா ஆகிய நாடுகள் அறிவுறுத்தியிருக்கின்றன.


Tags : United States , USA, Corona, 61,651 victims, 365 fatalities
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து