ஜம்மு காஷ்மீர் எல்லையில் வெடிபொருட்களுடன் பறந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

ஜம்மு: ஜம்மு பகுதியில் வெடிபொருள் நிறைந்த டிரோன் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டதை அடுத்து எல்லையில் பயங்கரவாத முயற்சியை பாதுகாப்பு படையினர் மீண்டும் முறியடித்தனர். ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கின் கனச்சக் பகுதியில் எல்லையில் இருந்து 6 கி.மீ தூரத்தில் 5 கிலோ வெடிபொருட்களுடன் டிரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சத்வாரி பகுதியில் கடந்த புதன்கிழமை ஆளில்லா டிரோன் காணப்பட்டது. இதற்கு முன்னர் ஜூலை 16 அன்று ஜம்மு விமானப்படை நிலையத்தை ஒரு டிரோன் சுற்றிவளைத்தது. இது உடனடியாக தேசிய பாதுகாப்பு காவல்படை டிரோன் எதிர்ப்பு பாதுகாப்பு ரேடார்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. தற்போது இந்த டிரோனும் ரேடார்கள் மூலம் கண்டுபிடித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>