டெல்டாவை விட வீரியம் நிறைந்த மற்றொரு வைரஸ் தோன்றலாம் :உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா : டெல்டா வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்த உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சீனாவில் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. தற்போதைய உருமாற்றம் ஆன டெல்டா மற்றும் டெல்டா ப்ளஸ் போன்ற வைரஸ்கள் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.இதனை கட்டுப்படுத்தும் பணிகளில் நாடுகள் அனைத்தும் முழு மூச்சுடன் ஈடுபட்டு இருக்கும் நிலையில், உலகளவில் கடந்த 4 வாரங்களில் கொரோனா பாதித்தவர்களில் 75% பேருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக உறுதி செய்யப்பட்ட டெல்டா வகை கொரோனா, 124 நாடுகளில் தற்போது பரவி வருகிறது. முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது, மேலும் 14 நாடுகளுக்கு இந்த வகை கொரோனா பரவியுள்ளது. இந்த நிலையில், ஆல்பா, பீட்டா, காமா வகை கொரோனாவை காட்டிலும் டெல்டா வகை மிக வேகமாக பரவும் என்றும் அனைத்து நாடுகளிலும் இன்னும் சில மாதங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தப்போவதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் டெல்டாவை விட வீரியம் நிறைந்த மற்றொரு வைரஸ் தோன்றலாம் என்றும் அந்த வைரஸ் அதிகம் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

Related Stories:

>