வெண்மணம்புதூர் உயர் நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம்: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ உறுதி

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம் வெண்மணம்புதூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி கொடுப்பாக வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ உறுதியளித்தார். கடம்பத்தூர் ஒன்றியம் வெணமணம்புதூரில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வந்தது. கடஙநம 3 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் பளிக்கு கூடுதல் வகுப்பறை காட்டாமல் நடுநிலைப்பள்ளி கட்டிடத்திலேயே செயல்படுகிறது. இங்கு, கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது.

இந்நிலையில், எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், மேற்கண்ட பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் படிக்கும் மாணவர்கள், அவர்களுக்கான கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்து விசாரித்தார். மேலும், வாட்ஸ்அப் மூலம் குழு அமைத்து பள்ளியின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.அப்போது, உயர்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கும்படி தலைமை ஆசிரியர் ராஜா, எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்தார். அதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ உறுதியளித்தார். இதை தொடர்ந்து ஆரம்ப பள்ளி கட்டிடம் சேதம் அடைந்திருப்பதை ஆய்வு செய்த அவர், மாணவர்களின் நலன் கருதி அந்த கட்டிடத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அவருடன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார், திமுக நிர்வாகிகள் கே.திராவிடபக்தன், களாம்பாக்கம் எம்.பன்னீர்செல்வம், கே.அரிகிருஷ்ணன், சரஸ்வதி சந்திரசேகர், தமிழ்ச்செல்வன், வி.ராஜசேகர், பிரசன்னகுமார், வேலு, சுப்பிரமணி, மெய்யழகன், கொப்பூர் டி.திலீப்குமார், லோட்டஸ் கோபிநாத், ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ்,, தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி, அறிவியல் பட்டதாரி ஆசிரியர் எஸ்.பாண்டியன் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: