பாமக நிர்வாகி திமுகவில் இணைந்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர்  தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலையில் கடம்பத்தூர் ஒன்றியம், கொப்பூர் ஊராட்சி துணைத் தலைவரும், பாமக நிர்வாகியுமான பி.ருக்மாங்கதன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அசோக்குமார், சேட்டு ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கே.திராவிட பக்தன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.அரிகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், வெங்கத்தூர் ஊராட்சி துணைத் தலைவருமான ஆர்.மோகனசுந்தரம் ஊராட்சி செயலாளர் கொப்பூர் டி.திலீப்குமார், பாப்பரம்பாக்கம் வே.குமார், ரவி, சுப்பிரமணி, ஆறுமுகம், பக்தவச்சலம், ரவீந்திரன், நாராயணசாமி, பரந்தாமன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: