மாமல்லபுரத்தில் கைத்திறன் முதன்மை செயலாளர் ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் கைவினை பொருட்களின் விற்பனை நிலையம், சிற்பத்துக்கான அங்கீகார தூண், கைவினை கிராம பணிகளை கைத்திற தொழில்கள் வளர்ச்சி கழக அரசு முதன்மை செயலாளர் அபூர்வா திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்லும் வழியில் உள்ள கைவினை விற்பனை நிலையத்தையும், மாமல்லபுரம் நுழைவாயிலில் அமைக்கப்படும் சிற்பத்துக்கான அங்கீகார தூண், ஐந்து ரதம் பகுதியில் உள்ள கடைகள் சீரமைப்பட்டு வருகின்றன. மேலும், காரணையில் பூம்புகார் சார்பில் மேற்கொள்ளபடும் அலங்கார வளைவு, சாலைகள், குடியிருப்பை அழகுபடுத்துதல், தெருவிளக்கு உள்பட பல்வேறு பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பூம்புகார் சார்பில் நடைபெறும் பணிகள் குறித்து துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

Related Stories:

More
>