×

பெங்களூருக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி 2 லாரிகளுடன் பறிமுதல்: மூன்று பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனிாயர் பெயின்ட் நிறுவனத்தில் இருந்து பெங்களூருக்கு பொருட்களை ஏற்றி செல்லும் லாரியில் ரேஷன் அரிசி கடத்துவதாக  சென்னை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி ஸ்டாலினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்படி, டிஎஸ்பி ஜான்சுந்தர் தலைமையில் இன்ஸ்பெக்டர் விநாயகம்  மற்றும் போலீசார், சென்னை -  பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை கீழம்பி சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட 2 மினி லாரிகளை மறித்து சோதனையிட்டனர். அதில் தனியார் கம்பெனி பொருட்களுடன் அரிசி மூட்டைகள் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து லாரிகளுடன், 3.5 டன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, ஆட்டுப்புதூரை சேர்ந்த தங்கமணி, மருதம் கிராமம் முத்துக்குமார், உளுந்தூர்பேட்டை சதீஷ் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Bangalore , Bangalore, ration rice, lorry, confiscated, arrested
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை