×

சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் மீண்டும் அமல் பஸ்சுக்கு பதிவு செய்யும் த ஏழுமலையான் தரிசன டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக ரூ.300 கட்டண சிறப்பு தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தற்போது தரிசித்து வருகின்றனர். விரைவில் கொரோனா பரவல் நீங்கிய பிறகு தர்ம தரிசன நடைமுறையை அமல்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வருவதால் மீண்டும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தினந்தோறும் ஆயிரம் டிக்கெட்டுகளை பயணிகளுக்கு  வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஐதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, பெங்களூரு ஆகிய மாநகரங்களில் இருந்து புறப்படும் ஆந்திர அரசு பஸ்களில் சூப்பர் லக்சரி மற்றும் ஏசி பஸ்களில் திருப்பதிக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும்ேபாது, கூடுதலாக ரூ.300 கட்டணம் செலுத்தினால் சுவாமி தரிசன டிக்கெட் வழங்கப்படும். இந்த திட்டம் நேற்று முன்தினம் முதல் மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னையில் எப்போது?
சென்னை, புதுச்சேரியில் இருந்து பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டதும் இத்திட்டம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 30 நாட்களுக்குள் ஆன்லைனில் பஸ்சுக்கு முன்பதிவு செய்து, தரிசன டிக்கெட் பெறும் வகையில், தேவஸ்தான நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

Tags : Ezhumalayan Darshan Ticket ,Amal Bus ,Chennai ,Tirupati Devasthanam , Chennai, cities, bus, Ezhumalayan Darshan ticket
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...