×

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று மாலை வெளியானது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டிரெண்டிங் ஆனது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படத்தின் அறிவிப்பு கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியானது. இப்படத்தை சன் டி.வி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். பாண்டிராஜ் இயக்குகிறார். இதில் சூர்யா ஜோடியாக முதல்முறையாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். ‘சூர்யா 40’ என்ற அடைமொழியுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது கொரோனா லாக்டவுன் தளர்வுகளுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

 சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள். இதை முன்னிட்டு நேற்று மாலை 6 மணியளவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. படத்துக்கு ‘எதற்கும் துணிந்தவன்’  என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. பர்ஸ்ட் லுக்கில் சூர்யா மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறார். சூர்யாவின் பிறந்தநாளையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் தலைப்பும் வெளியிடப்பட்டதால், அவரது ரசிகர்கள் பெரிதும் உற்சாகம் அடைந்துள்ளனர். டிவிட்டரில் #சூர்யா40, #எதற்கும்துணிந்தவன் போன்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது. சமூக வலைத்தளங்களில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வைரலானது. சூர்யாவின் பிறந்தநாள் குறித்த வாழ்த்துடன் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியானதால், இரட்டை மகிழ்ச்சியைக் கொண்டாடி வருவதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் முதல் படம் ‘எதற்கும் துணிந்தவன்’ என்பதால், இப்படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள் ளது.

ஏற்கனவே ‘பசங்க 2’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த சூர்யாவை இயக்கிய பாண்டிராஜ், தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் முதல்முறையாக சூர்யாவை ஹீரோவாக இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார். தற்போது அவர் இயக்கும் சூர்யா படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்பட பலர் நடிக்கின்றனர். ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசை அமை க்கிறார்.

Tags : Surya ,Sun Pictures , Sun Pictures, Surya, ‘Brave for Anything’, First Look
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்