×

எண்ணூரில் ரூ.21 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கம்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருவொற்றியூர்: மின்வாரியம் சார்பில் எண்ணூரில் ரூ. 20.5 லட்சம் ரூபாய் செலவில் புதிய டிரான்ஸ்பார்மர்  கே.பி. சங்கர் எம்எல்ஏ தொடங்கிவைத்தார். சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்து நகர், உலக நாதபுரம், எர்ணாவூர் குப்பம் போன்ற பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தங்கு தடையில்லாமல் மின் வினியோகம் செய்யும் வகையில் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ரூ. 20.5 லட்சம் செலவில் 3 புதிய   டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் புதிய மின் கேபிள்கள் அமைக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்ததை ஒட்டி இதன் துவக்கவிழா எண்ணூரில் நேற்று நடைபெற்றது.

செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கே.பி.சங்கர் எம்எல்ஏ 3 டிரான்ஸ்பார்மர்களை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார் . மூன்று பகுதிகளுக்கும் தனித்தனியாக டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டதால் மின்தடை ஏற்படாது. இதன் மூலம் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கூடுதல் திறன் கொண்ட  100 கிலோவாட் மின்சாரம்  தடையின்றி  பெற்று பயன்பெறுவார்கள் என்று கே.பி.சங்கர் எம்எல்ஏ தெரிவித்தார். உதவி செயற்பொறியாளர் சொக்கலிங்கம், உதவி பொறியாளர் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ennore ,MLA , Ennore, New Transformer, MLA
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்