×

69 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் 69 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த லட்சுமி விபச்சார தடுப்பு பிரிவு-Iக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த இந்திராணி ராயபுரம் குற்றப்பிரிவுக்கும், ராயபுரம் குற்றப்பிரிவில் இருந்த கவுசல்யா தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கிருஷ்ணகுமார் திருமுல்லைவாயில் குற்றப்பிரிவுக்கும், விமான நிலையத்தில் இருந்து குமார் பழவந்தாங்கல் குற்றப்பிரிவுக்கும், முத்தாபுதுப்பேட்டை குற்றப்பிரிவில் இருந்த சீனிவாசன் நொளம்பூர் குற்றப்பிரிவுக்கும், திருவிகா நகர் குற்றப்பிரிவில் இருந்த திருமலைகொழுந்து டி.பி.சத்திரம் குற்றப்பிரிவுக்கும், திருமுல்லைவாயில் குற்றப்பிரிவில் இருந்த சங்கரநாராயணன் தண்டையார் பேட்டை சட்டம் ஒழுங்கிற்கும்,

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராஜேஸ்வரி அடையார் குற்றப்பிரிவுக்கும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனை காவல் நிலையத்தில் இருந்த ஜெயலட்சுமி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த ரமணி முத்தாபுதுப்பேட் குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜோதிலட்சுமி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், அண்ணாசாலை குற்றப்பிரிவில் இருந்த இளங்கோவன் மெரினா சட்டம் ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வராஜ் ஐஸ்அவுஸ் குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கோவிந்தராஜ் ராயிலாநகர் -Iக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரூபி தேவசாகாய ராணி பள்ளிக்கரணை குற்றப்பிரிவுக்கும், ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை-II இல் இருந்த பானுபத்மனி காத்திருப்போர் பட்டியலுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சிவகாமி அண்ணாசாலை குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சசிலேகா மத்திய குற்றப்பிரிவுக்கும், சென்னை சிபிசிஐடியில் இருந்த வனிதா கீழ்ப்பாக்கம் சட்டம் ஒழுங்கிற்கும், சென்னை சிபிசிஐடியில் இருந்த வள்ளி அயனாவரம் சட்டம் ஒழுங்கிற்கும், சென்னை சிபிசிஐடியில் இருந்த சிவகுமார் பாண்டிபஜார் குற்றப்பிரிவுக்கும், சென்னை சிபிசிஐடியில் இருந்த ரவி பல்லாவரம் குற்றப்பிரிவுக்கும், காஞ்சிபுரம் சிபிசிஐடியில் இருந்த ஜெயசங்கர் தாம்பரம் குற்றப்பிரிவுக்கும், சென்னை சிபிசிஐடியில் இருந்த பொற்கொடி கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், சென்னை சிபிசிஐடியில் இருந்த செங்குட்டுவன் அம்பத்தூர் குற்றப்பிரிவுக்கும்,

சென்னை சிபிசிஐடியில் இருந்த நாகராஜன் மீன்பிடி துறைமுகம் குற்றப்பிரிவுக்கும், சென்னை சிபிசிஐடியில் இருந்த ரமேஷ் செங்குன்றம் சட்டம் ஒழுங்கிற்கும், மதுரை தேசிய போதை தடுப்பு பிரிவு சிஐடியில் இருந்த செந்தில்குமார் தலைமை செயலகம் காலனி சட்டம் ஒழுங்கிற்கும், சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் இருந்த தங்கராஜ் தரமணி குற்றப்பிரிவுக்கும், சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் இருந்த தாமஸ் செவியர் ஜார்ஜ் விருகம்பாக்கம் சட்டம் ஒழுங்கிற்கும், சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் இருந்த சிவகுமார் மடிப்பாக்கம் சட்டம் ஒழுங்கிற்கும், சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் இருந்த அமுதா தண்டையார் பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம்  என  69 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Shankar Jiwal , Inspector Transfer, Commissioner of Police, Shankar Jiwal
× RELATED ஐதராபாத்தில் நடந்த பூப்பந்து...