×

கிராமங்களில் இணையதள சேவைக்கு ரூ.1,800 கோடியில் பாரத் நெட் திட்டம்: சேலத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு

சேலம்: தமிழகத்தில் அனைத்து கிராமங்களுக்கும் இண்டர் நெட் சேவை வழங்க ரூ.1,800 கோடி மதிப்பில் பாரத் நெட் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.சேலம் மாவட்டத்தில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், துறை சார்ந்த பல்வேறு ஆய்வு பணிகளை நேற்று மேற்கொண்டார். ஜாகீர்அம்மாபாளையத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில் தனியார் மென்பொருள் நிறுவனத்தினர் மற்றும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த 1.5 லட்சம் பட்டதாரிகள் ஆண்டுதோறும் படிப்பை முடித்து வெளியே வருகின்றனர்.

அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதற்காகவே தகவல் தொழில்நுட்ப துறையில் போதிய கட்டமைப்பை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இ-சேவை மையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த ஆய்வு நடக்கிறது. ஆதார் உதவி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. கடந்த ஆட்சியில் ஒரே நேரத்தில் இ-பாஸ் பெற 7 லட்சம் பேர் வரை மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்தது. அதை தற்போது, 60 லட்சமாக தரம் உயர்த்தியுள்ளோம்.

தமிழகத்தில் உள்ள 12,534 கிராம ஊராட்சிகளுக்கும் முறையாக பைபர் நெட் மூலம் இணையதள வசதியை வழங்க ரூ.1,800 கோடி மதிப்பில் பாரத் நெட் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. அந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்துவிட்டால், எங்கும் இணையதள சேவை முடக்கம் இருக்காது. சேலம், கோவை, ஓசூர் உள்ளிட்ட 7 இடங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான ஆய்வு பணி நடக்கிறது என்றார்.

Tags : Bharat Net ,Minister ,Mano Thankaraj ,Salem , Internet service in villages, Bharat Net Project, Minister Mano Thankaraj
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...