கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கட்டணம்: அரசு அறிவிப்பு

நெல்லை: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலையான எல்கேஜி, முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பில் 25 சதவீதம் ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். இவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசு, தனியார் பள்ளிகளுக்கு வழங்குகிறது. கடந்த ஆண்டு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம்:

எல்கேஜி, யுகேஜி, முதல் வகுப்புக்கு ஒரு குழந்தைக்கு ரூ.12,458.94 பைசாவும், 2ம் வகுப்பிற்கு ரூ.12,449.15 பைசாவும், 3ம் வகுப்பிற்கு ரூ.12,578.98 பைசாவும், 4ம் வகுப்பிற்கு ரூ.12,584.83 பைசாவும், 5ம் வகுப்பிற்கு ரூ.12,831.29 பைசாவும், 6ம் வகுப்பிற்கு ரூ.17,077.34 பைசாவும், 7ம் வகுப்பிற்கு ரூ.17,106.62 பைசாவும், 8ம் வகுப்பிற்கு ரூ.17,027.35 பைசாவும் அனுமதித்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>