திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய விவகாரம் அதிமுக மாஜி அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை வழக்கு: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணை

சென்னை: நாடோடிகள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி. இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில், போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில், நடிகை சாந்தினி சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், வழக்கு செலவாக தனக்கு மாதாந்திர இடைக்கால தொகையாக ரூ.2 லட்சத்து 80 ஆயிரம், மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மன உளைச்சல் ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் போது பிரச்சனை ஏற்பட்டால் இழப்பீடு கோருவதற்கான நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: