ஓபிஎஸ், இபிஎஸ் உடன் அண்ணாமலை சந்திப்பு

சென்னை: ஓ.பி.எஸ், இபிஎஸ்சை அண்ணாமலை நேற்று திடீரென தனித்தனியாக சந்தித்து பேசினார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சென்னை கிரீன்ஸ்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமியை நேற்று மாலை திடீரென சந்தித்து பேசினார். இதே போல அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தையும் அவரது இல்லத்தில் அண்ணாமலை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது அண்ணாமலை அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். சந்திப்பின் போது பாஜ பொது செயலாளர் கருநாகராஜன், எம்.என்.ராஜா உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள்  உடன் இருந்தனர். இருவரிடமும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும் வர உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும் ஆலோசித்ததாகவும் தெரிகிறது. உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக, பாஜ கூட்டணி தொடர வேண்டும் என்று அண்ணாமலை கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

Related Stories:

>