ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு இல்லை என்பது முரண்பாடாக உள்ளது: ஓபிஎஸ் அறிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தொற்று தீவிரமாக இருந்தபோது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை என்று தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் கூறியுள்ளார். மே 7ம் தேதி மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற அன்றைய தினமே பிரதமருக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், தமிழ்நாடு ஆக்சிஜன் நெருக்கடியில் சிக்கி தவிப்பதாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இரண்டு நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டில் 13 பேர் எதிர்பாராதவிதமாக இறந்து இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இதோடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரின் பேட்டியை ஒப்பிட்டு பார்த்தால் முரண்பாடு தெரிகிறது. இதை விளக்க வேண்டிய கடமை தமிழக அரசிற்கு உண்டு என கூறியுள்ளார்.

Related Stories:

>