10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கான எந்த பணியும் நடைபெறவில்லை: சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் முதல் ஆய்வுக்கூட்டம் அண்ணா சாலையில் உள்ள ஆணைய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை வகித்தார். சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான், துணை தலைவர் மஸ்தான், உறுப்பினர் செயலாளர் ரவிச்சந்திரன், மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். பின்னர் பீட்டர் அல்போன்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது: சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், சில நிர்வாக மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. அதுகுறித்து முதல்வர் அறிவிப்பார். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினர் கல்வி கடன், வேலைவாய்ப்புகள், திட்டங்கள் செயல்படுத்துதல் போன்ற எந்த பணிகளும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் பேசிய பேச்சு சமூக  ஊடகங்களில் பரவி வருகிறது. சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுபவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டும், என்றார்.

Related Stories:

More
>