×

மாநில கணக்காயர் அலுவலகத்தில் மேம்படுத்தப்பட்ட இண்டர்-ஆக்டிவ் குரல் மறுமொழி முறை அறிமுகம்

சென்னை: தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலகத்தில் மேம்படுத்தப்பட்ட இண்டர்-ஆக்டிவ் குரல் மறுமொழி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதுநிலை துணை மாநில கணக்காயர் தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலகம் கடந்த 14ம் தேதி முதல் மேம்படுத்தப்பட்ட இண்டர்-ஆக்டிவ் குரல் மறுமொழி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை 044-24325050 எண்ணை டயல் செய்வதன் மூலம் பயன்படுத்தலாம். இந்த சேவை தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள், தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் பொது சேமநல நிதி, ஆசிரியர் சேமநல நிதி சந்தாதாரர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி நடப்பு இருப்பு, நடப்பு ஆண்டில் பெற்ற கடன், விடுபட்ட தொகை, கணக்கின் இறுதித் தொகை பெறுவதற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பத்தின் நிலை ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும்.

தமிழக அரசின் விதியின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியுடைய மேற்கண்ட அதிகாரிகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரசு சாரா கல்வி நிறுவனங்களின் பணியாளர்கள் ஓய்வூதிய விண்ணப்பங்களின் நிலையை அறியவும் இந்த வசதியை பயன்படுத்தலாம். தமிழகத்தில் ஓய்வூதியம் பெறும் பிற அரசுகள், அரசு கலைஞர்களைத் தவிர வேறு நபர்கள், கலைஞர் ஓய்வூதியம், தமிழ் அறிஞர் ஓய்வூதியம், பத்திரிகையாளர் ஓய்வூதியம், நலிந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம், சமஸ்கிருத அறிஞர் ஓய்வூதியம் போன்ற ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு தங்களின் ஓய்வூதிய விண்ணப்பங்களின் நிலையை அறியவும் இந்த வசதியை பயன்படுத்தலாம். இந்த வசதியை பயன்படுத்தி பே ஸ்லிப்பைப் பதிவேற்றுவது தொடர்பான கடிதங்களின் நிலை மற்றும் தகவல்களையும் சுய வரைதல் அதிகாரிகள் அறிந்துகொள்ளலாம்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள், அரசு சாரா கல்வி நிறுவன பணியாளர்கள் ஓய்வூதிய விண்ணப்பங்களின் நிலையை அறியவும் இதை பயன்படுத்தலாம்.

Tags : Accounts , Introduction of the enhanced interactive voice response system in the State Accounts Office
× RELATED வங்கிக்கணக்குகளில் இருந்து ரூ.21,000...