×

சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமராமல் சரிசமமாக அமர்ந்து பணி செய்ய வேண்டும்: அமைச்சர் மூர்த்தி உத்தரவு

சென்னை: வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பதிவுத்துறை செயலர் மற்றும் பதிவுத்துறை தலைவருடன் கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களில் அமைச்சர் கடந்த வாரம் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டபோது பதிவு அலுவலர்கள் தங்களது அலுவலகத்தில் உயர்ந்த மேடையில்  அமர்ந்து பதிவு பணி செய்து வருவதால். பொதுமக்களை மரியாதையுடன் நடத்தி அவர்களுக்கு பதிவு சேவையினை வழங்குவது சிரமமாக உள்ளது கண்டறியப்பட்டது. எனவே, இனிவரும் காலங்களில் பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமராமல் சரிசமமாக அமர்ந்து பதிவு பணியினை செய்ய வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.இதனைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு வெளிப்படையான சேவையினை உறுதிசெய்யும் வகையில் சார்பதிவாளர்கள் தாங்கள் அமர்ந்துள்ள மேடையினை சுற்றியுள்ள தடுப்பினை உடனடியாக அகற்றி தங்கள் இருக்கையினை சமதளத்தில் அமைக்க வேண்டும்.

Tags : Minister ,Murthy , Registration officers in affiliated offices should sit on equal footing and not on high platform: Minister Murthy
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...