×

செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் ஒன்றிய அரசை கண்டித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட காங்கிரசார் முயற்சி: போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

சென்னை: செல்போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் ஒன்றிய அரசைக் கண்டித்து கவர்னர் மாளிகை நோக்கி காங்கிரசார் பேரணி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சைதாப்பேட்டையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் எதிர்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்களின் தொலைபேசிகளை பெகாசஸ் மென்பொருள் வாயிலாக ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தால் நாட்டின் பாதுகாப்பு கேள்விகுறியாகியுள்ளது என்றும், இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும், பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி நேற்று பேரணி நடைபெற்றது. சைதாப்பேட்டை ராஜிவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, அங்கிருந்து தொடங்கப்பட்ட பேரணிக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார்.

ஆயிரக்கணக்கான காங்கிரசார் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பேரணியில், மூத்த தலைவர்கள் தனுஷ்கோடி ஆதித்தன், கே.ஆர்.ராமசாமி, ஜெயக்குமார் எம்பி, செயல் தலைவர் மயியூரா ஜெயக்குமார், பொன் கிருஷ்ணமூர்த்தி, சிரஞ்சீவி, பொருளாளர் ரூபி மனோகரன், மகிளா காங்கிரஸ் தலைவி சுதா, எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ், அசன் மவுலானா, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், முத்தழகன், நாஞ்சில் பிரசாத், அடையார் துரை, டில்லி பாபு, ரஞ்சன் குமார் மற்றும் நிர்வாகிகள் சுமதி அன்பரசு, காண்டீபன், திருவான்மியூர் மனோகரன், மயிலை தரணி உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கவர்னர் மாளிகை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து போலீசார், காங்கிரஸ் தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து தலைவர் கே.எஸ்.அழகிரியின்  அறிவுரைப்படி காங்கிரசார் கலைந்து சென்றனர். இந்த பேரணியால் சின்னமலை பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 


Tags : Governor's House , Congress attempt to blockade Governor's House over cell phone tampering: Govt
× RELATED ரோடு ஷோவுக்கு வந்தபோது ஆளுநர்...