×

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.25.56 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை..!

கரூர்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.25.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.13 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை நிறைவு பெற்றது. 13 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த ரெய்டில் சொத்து ஆவணங்கள், உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, கரூரில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சாயப்பட்டறை, உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள் உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது ஜிபிஎஸ் கருவி வாங்கியதில் முறைகேடு என புகார் எழுந்த நிலையில், இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Former Minister ,M. R. ,Vijayabascar ,Langsa , Rs 25.56 lakh seized during raid on former minister MR Vijayabaskar's house: Anti-bribery report ..!
× RELATED சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி!