உசிலம்பட்டியில் 9 கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவு

மதுரை: உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான 9 கடைகளுக்கு உடனடியாக சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டெண்டர் நடத்தப்படாமல் சட்டவிரோதமாக உரிமம், பெயர் மாற்றம் செய்த புகாரில் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 9 கடைகளின் உரிமம், பெயர் மாற்றம் தொடர்பாக மேல் நடவடிக்கைகளை தொடரவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கடையின் உரிமங்களுக்கான கால வரம்பு குறித்த விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்று உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது ஏலம் விட இயலவில்லை என ஊராட்சி மன்ற தலைவர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டி ஊராட்சியில் டெண்டர் நடத்தப்படாமல் 9 கடைகளுக்கு சட்டவிரோதமாக உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

Related Stories: