×

சிறுபான்மையினருக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க தீர்மானம்!: பீட்டர் அல்ஃபோன்ஸ்

சென்னை: சிறுபான்மையினருக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சிறுபான்மையினர் நல ஆணையத்தின் ஆய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நல ஆணையத்தின் முதல் ஆய்வு கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஆணை அலுவலகத்தில் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ், முதல் ஆய்வு கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக கூறினார்.

சிறுபான்மையினருக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக பீட்டர் அல்ஃபோன்ஸ் குறிப்பிட்டார். சிறுபான்மை கல்வி நிறுவனங்களை முறையாக வகைப்படுத்தி சிறுபான்மை மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர தமிழக அரசுக்கு பீட்டர் அல்ஃபோன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். வன்னியர் சமூக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று வகைப்படுத்துதலை மதம் மாறிய கிருஸ்தவ வன்னியர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Tags : Peter Alphonse , Minorities, Artist, Bharat Ratna, Peter Alphonse
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர்களை...