×

சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு: ஆகஸ்ட் 5 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 5 வரை நீட்டித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் வேனில் சிவசங்கர் பாபாவை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த போது ஆதரவாளர்கள் சூழ்ந்து முழக்கமிட்டுள்ளனர். பெண்கள் அழுகுரலோடு பாபா, பாபா என வேனில் இருந்த சிவசங்கர் பாபாவை பார்க்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தங்குப்பம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அந்த பள்ளியை நடத்தி வருகிறார். இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் 3 பேர் கொடுத்த புகார் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார். சிவசங்கர் பாபா மீதான வழக்கை செங்கல்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். நேற்று சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியை சேர்ந்த 3 ஆசிரியைகளிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தினர். 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 3 ஆசிரியைகள் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 


மேலும் 2 ஆசிரியர்கள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விசாரணை நடத்தப்பட்ட ஆசிரியர்கள் எப்போது அழைத்தாலும் வர வேண்டும் என அறிவுறுத்தல் செய்யப்பட்டிருந்தது. இதுவரை 8 முன்னாள் மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில், இவர் மீது 3 போக்சோ வழக்கு போடப்பட்டுள்ளது. இதில் ஒரு போக்சோ வழக்கில் மட்டும் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டாவது போக்சோ வழக்கில் சென்னை சிபிசிஐடி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். எனவே புழல் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவருக்கு ஆகஸ்ட் 5 வரை நீதிமன்ற காவல் நீட்டித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியை சேர்ந்த 3 ஆசிரியைகளிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டது. மொத்தம் 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 3 ஆசிரியைகள் மட்டும் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். எனவே 2 ஆசிரியர்கள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விசாரணை நடத்தப்பட்ட ஆசிரியர்கள் எப்போது அழைத்தாலும் வர வேண்டும் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. 



Tags : Sushil ,Hari School ,Shivshankar ,Sebu Boco Court , Sivashankar Baba, sex, case, August 5, police
× RELATED பாஜ மூத்த தலைவர் சுஷில் மோடிக்கு...