ஒடிசா ஏவுதளத்தில் இருந்து இரு ஏவுகணை சோதனை வெற்றி

புதுடெல்லி: தரையிலிருந்து விண்ணிற்கு பறந்து இலக்கை அழிக்கும் ஆகாஷ் ஏவுகணையையும், பீரங்கிகளை தகர்க்கும் ஏவுகணையையும் இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது ஒடிசா மாநிலத்தில் உள்ள ஏவு தளத்தில் நேற்று மதியம் ஆகாஷ் ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அதனை  தயாரித்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. இதுகுறித்து டிஆர்டிஓ வெளியிட்ட அறிக்கையில், ‘ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள ஆகாஷ் ஏவுகணையை விட தற்போது உருவாக்கப்பட்டுள்ள அதன் மேம்பட்ட வடிவம் திறன் மிகுந்தது.

இதன் மூலம் இந்திய விமானப்படையின் வலிமை மேலும் கூடும். இது தவிர உள்நாட்டிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட இலகு ரக பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையும் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது. இரு ஏவுகணைகளின் வெற்றியை தொடர்ந்து அதை தயாரித்த டிஆர்டிஓ மற்றும் பிற அரசு நிறுவனங்களுக்கு ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories: