ஒரே ஆண்டிலே பர்மா காலனி சாலை ‘பஞ்சர்’-அதிமுக ஆட்சியில் அமைத்தது

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே அடியனூத்து ஊராட்சிக்குட்பட்டது பர்மா காலனி. இங்கு கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒரு ஆண்டிற்கு முன்பு போடப்பட்ட தார்ச்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் பள்ளங்களில் மழைநீர் குளல் போல் தேங்கி உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் பள்ளங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக டூவீலர்களில் வருவோர் பள்ளத்தில் சிக்கி அடிக்கடி விபத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே அடியனூத்து ஊராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

Related Stories: