முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்; 25-ம் தேதிக்கு பிறகு பாஜக தலைமையின் வழிகாட்டுதல் படி செயல்படுவேன்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா

பெங்களூரு: முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார். வரும் 25-ம் தேதிக்கு பிறகு பாஜக தலைமையின் வழிகாட்டுதல் படி செயல்படுவேன் எனவும் கூறினார். உடல்நிலையை காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்ய தயார் என பிரதமர் மோடியிடம் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்திருந்ததாக தகவல் வெளியானது. கர்நாடக பாஜவில் எடியூரப்பாவின் மகன் விஜேயந்திராவனி தலையீடு அதிகமாக உள்ளதாக கூறி சில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில் தனி விமானத்தில் மகன் விஜயேந்திராவுடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். எனவே முதல்வர் பதவியில் இருந்து விலக எடியூரப்பா விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டது. மேலும் இது குறித்து பிரதமர் மோடி விரைவில் இறுதி முடிவு எடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. 

அதேபோல் கட்சி மேலிடம் கூறினால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறியிருந்தார். டெல்லியில் உள்ள கட்சியின் உயர்மட்ட தலைமை கூறும் வகையில் நான் முதல் முதல்வராக இருப்பேன். அவர்கள் எப்போது சொல்கிறார்களோ அப்போது பதவியில் இருந்து விலகுவேன் என எடியூரப்பா கூறியிருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடக முதலமைச்சராக இருக்கும் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பாஜகவினரே கருத்துகள் கூறி வருகின்றனர். அம்மாநிலத்தின் சுற்றுலா துறை அமைச்சர் யோகஷ்வர், பாஜக எம்எல்ஏக்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் பகிரங்கமாக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் எடியூரப்பாவை விமர்சித்து வருகின்றனர். 

கட்சியின் தலைமையானது எனக்கு வாய்ப்பளித்து இருக்கிறது. அதனை பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு எதிராக யார் பேசினாலும் அது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. கட்சியின் தலைமை என்னை விரும்புகிறது, நம்பிக்கை வைத்து வாய்ப்பை அளித்துள்ளது. அதற்காக மாநிலத்தின் வளர்ச்சிக்காக நான் பணியாற்றுவதில் ஈடுபட்டுள்ளேன். மற்றபடி வேறெதையும் சிந்திக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.

Related Stories: