×

வருமானத்திற்கு அதிகமாக சொத்து; போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு, ஊழல்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது  லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆர்.ஏ.புரம் சாய்பாபா கோயில் அருகே அமைந்துள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமாக கரூரில் உள்ள வீடு, நிறுவனங்கள், உறவினருக்குச் சொந்தமான வீடுகள் உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட போலீசார், இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. 


விஜயபாஸ்கரின் உதவியாளர்கள், ஆதரவாளரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அப்போது, போக்குவரத்துத் துறையில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடைபெற்றதாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. 



Tags : M.P. R. Langsa , For income, property, MR Vijayabaskar, case
× RELATED தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.46%...