×

கடந்த 2008ம் ஆண்டே ஐபிஎஸ் அதிகாரிகளிடம் இஸ்ரேல் தயாரிப்பு உளவு கருவியை செயல்முறை விளக்கம் செய்து காட்டிய அமித்ஷா: திடுக்கிடும் தகவல்!!

குஜராத் : உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 2008ம் ஆண்டே இஸ்ரேல் தயாரிப்பு உளவு கருவியை செயல்முறை விளக்கம் செய்து காட்டியது தற்போது பேசும் பொருளாகி உள்ளது. இஸ்ரேலின் என்எஸ்இ நிறுவனம் தயாரித்துள்ள பெகாசஸ் ஸ்பைவேர் மூலமாக பாஜக அரசு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக ஆதாரம் ஒன்று வெளியாகி உள்ளது. இஸ்ரேலிய கருவியை கொண்டு செல்போனை ஒட்டு கேட்பது பற்றி 2008ம் ஆண்டு அமித்ஷா செயல்முறை விளக்கம் அளித்துள்ளார்.

குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்த போது ஐபிஎஸ் அதிகாரிகள் கூட்டத்தில் ஒட்டுக்கேட்பு பற்றி அமித்ஷா பேசியுள்ளார்.இஸ்ரேலிய இயந்திரம் ஒன்றில் ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்து எந்த தொலைபேசி உரையாடலையும் கேட்கலாம் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அதன்பிறகு தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு புதியதாக செல்போன் வாங்கியுள்ளனர். ஊடகவியலாளர் ராஜ்தீப் சரதேசாய்  கடந்த 2019ம் ஆண்டு எழுதிய ஹொவ் மோடி வன் இந்தியா என்ற நூலில் 42வது பக்கத்தில் இந்த தகவல்கள் உள்ளன. காந்தி நகரைச் சேர்ந்த செய்தியாளர் ராஜீவ் ஷா என்பவரே அந்த தகவல்களை கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் குஜராத் அரசு இஸ்ரேலில் இருந்து அந்த உளவு கருவியை வாங்கியதா என தெரியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags : Ande IPS ,Israel , அமித்ஷா
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...