இன்று உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கரில் அதீத மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

டெல்லி: வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. காற்றழத்த தாழ்வு பகுதியால் தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கரில் அதீத மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெருமழையால் ஏற்கனவே மும்பை பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மீண்டும் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.  இதனால் அந்தந்த மாநிலங்கள் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தெற்கு, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும் என்றும், வடமேற்கு, வடக்கு டெல்லி, ஜிந்த், ரோஹ்தக், கைதால், ரேவாரி, பவல், திசாரா, கஸ்கஞ்ச், பரத்பூர், நாட்பாய், பர்சனா போன்ற பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்தது. நேற்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ,திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது.  இந்நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>