×

இரண்டாவது நாளாக ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.8-ஆக பதிவு

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக  இன்று காலை 7.42 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 4.8-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தொடர்பான பாதிப்புகள் குறித்து உறுதியான தகவல் ஏதுவும் வெளியாகவில்லை, கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் நேற்று முன்தினம் அதிகாலை 5.24 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.  


தொடர் நிலநடுக்கத்தால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கமானது பிகானிர் பகுதியில் 110 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு சில மணி நேரத்திற்கு முன் மேகாலயாவில் 4.1 ரிக்டர் அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் புவியியல் மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் நிலநடுக்கம் தொடர்பான  பாதிப்புகள் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நேற்று ஒரே நாளில் 3 இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 



Tags : Rajasthan State ,Bikani , Second, Rajasthan, earthquake, 4.8 record
× RELATED கோட்டா பயிற்சி மையத்தில் படித்த...