மாநகராட்சி 8வது மண்டலத்தில் தூய்மை பணிகள்: எம்.எல்.ஏ. ஆய்வு

அண்ணாநகர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, கொரோனா சிறப்பு வார்டு,  தடுப்பூசி முகாம் என பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாக, அனைத்து மாநகராட்சிகளிலும் குப்பை, கழிவுபொருட்கள், மருத்துவ கழிவுகள் போன்றவை உடனுக்குடன் அகற்றப்பட வேண்டும். மேலும், அந்தந்த பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு,  தூய்மையாக இருக்க வேண்டுமென உத்தரவிட்டு இருந்தார்.   அதனடிப்படையில், சென்னை மாநகராட்சி அமைந்தகரை 8வது மண்டலத்துக்கு உட்பட்ட அமைந்தகரை, அரும்பாக்கம், வில்லிவாக்கம், டி.பி.சத்திரம், கீழ்ப்பாக்கம் மற்றும் சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், கடந்த சில நாட்களாக தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதில், மாநகராட்சி ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட  பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் துப்புரவு மற்றும் தூய்மைப் பணிகளை நேற்றுமுன்தினம் திமுக எம்எல்ஏ எம்.கே.மோகன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தூய்மை பணிகள் குறித்து, ஆலோசனை வழங்கினார். இதனையடுத்து, அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அனைவருக்கும் சானிடைசர், கையுறை, கபசுர குடிநீர் ஆகியவற்றை  வழங்கி ஊக்கப்படுத்தினார்.

Related Stories:

>