×

எமிலியா ஓபன் டென்னிஸ் ஒற்றையர், இரட்டையர் பைனலில் அமெரிக்க மாணவி காப்

பார்மா: அமெரிக்காவை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி  கோரி காப்,   முதல்முறையாக ஒரு தொடரின் ஒற்றையர், இரட்டையர் என 2 பிரிவுகளிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இத்தாலியின் பார்மா நகரில்  எமிலியா  ரோமாக்னா ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நடக்கிறது.  இதன் ஒற்றையர் அரையிறுதி ஒன்றில் செக் குடியரசு வீராங்கனை  கேதரினா சினியகோவா (25 வயது, 68வது ரேங்க்),  அமெரிக்க   வீராங்கனை கோரி காப் (30வது ரேங்க்) மோதினர். இழுபறியாக நீடித்த முதல் செட்டை காப் 7-5 என்ற புள்ளி கணக்கில் போராடி கைப்பற்றினார். அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடிய சினியகோவா 6-1 என எளிதாக வென்ற் பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதனால் 3வது செட்டில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சினியகோவாவின் சர்வீஸ் ஆட்டங்களை  முறியடித்து புள்ளிகளைக் குவித்த காப் 7-5, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் 2 மணி, 8 நிமிடம் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் சீன வீராங்கனை கியாங் வாங் (29 வயது, 48வது ரேங்க்)  6-2, 7-6 (7-3) என நேர் செட்களில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை (65வது ரேங்க்)  வீழத்தி பைனலுக்கு தகுதி பெற்றார். இறுதிப்போட்டியில் காப் –  கியாங் மோதுகின்றனர். இதே தொடரின் இரட்டையர் அரையிறுதியில் சக வீராங்கனை கேதரின் மெக்நலியுடன் இணைந்து களமிறங்கிய காப்   7-5, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் சிலி வீராங்கனை அலெக்சா குராச்சி –  டெசிரே  கிராசிக் (அமெரிக்கா) ஜோடியை  வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். டபிள்யூடிஏ தொடர் ஒன்றின் ஒற்றையர், இரட்டையர் என 2பிரிவுகளிலும்  இறுதிப்போட்டிக்கு காப் முதல் முறையாக முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது….

The post எமிலியா ஓபன் டென்னிஸ் ஒற்றையர், இரட்டையர் பைனலில் அமெரிக்க மாணவி காப் appeared first on Dinakaran.

Tags : Emilia Open ,Parma ,Cory Cope ,America ,Cope ,
× RELATED ரூ.2 கோடி கொடுக்கல் வாங்கல் தகராறு...