×

தேசியவாதி சேஷாத்ரி மறைவு கே.எஸ்.அழகிரி இரங்கல்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பழம்பெரும் தேசியவாதியும், பதிப்பகத் துறையில் நீண்ட காலமாக இருந்து வருபவருமான டி.இ.சேஷாத்ரி தனது 93வது வயதில் காலமான செய்தி கேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தேன். இவரைப் போல தேசபக்திமிக்க நூல்களை தமிழில் எவரும் வெளியிட்டிருக்க முடியாது. அவரது மறைவு பதிப்பகத்துறைக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : KS Alagiri ,Seshadri , Nationalist, Seshadri, KS Alagiri
× RELATED தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு...