10, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதம்தோறும் அலகுத்தேர்வு

சென்னை:  பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாதம்தோறும் அலகுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள  சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

* ஒவ்வொரு பாடத்திலும் மாதாவாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட பாடத்திட்டத்தின்படி அலகுத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

* அலகுத் தேர்வுகளை காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடத்தி மதிப்பெண்கள் 50 வழங்க வேண்டும். இதற்கான கேள்வித்தாள்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக மின்னஞ்சல் மூலமாக அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

* அலகுத் தேர்வுகள் ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் நடத்தப்பட வேண்டும். அதற்காக ஒவ்வொரு பாட ஆசிரியரும் அந்த பாடங்களை படிக்கும் மாணவர்களை இணைத்து ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்க வேண்டும்.

* மாணவர்களுக்கு தனியாகவும், மாணவியருக்கு தனியாகவும் குழு உருவாக்க வேண்டும். இந்த குழுவில் தலைமை ஆசிரியர்கள் இடம் பெற வேண்டும்.

* மாணவர்கள் லேப்டாப் மூலமோ, செல்போன் மூலமோ கேள்வித்தாளை பதிவிறக்கம் செய்து தனித் தாளில் விடைகளை எழுத அறிவுறுத்த வேண்டும்.

Related Stories:

>