×

அதிமுக ஆட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதால் மேற்கு மண்டலத்தில் 34 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் செழிப்பான மண்டலமான மேற்கு மண்டலத்தில் அதிமுக ஆட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட 34 இன்ஸ்பெக்டர்களை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி உயர் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தை நிர்வாக வசதிக்காக 4 மண்டலங்களாக காவல்துறையில் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் மிகவும் செழிப்பான மண்டலமாக மேற்கு மண்டலம் இயங்கி வருகிறது. இந்த மண்டலத்தில் தான் அதிமுகவின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, அன்பழகன் ஆகியோர் தொகுதிகள் உள்ளன.

இதனால் அதிமுக ஆட்சியின்போது மேற்கு மண்டலத்தில் காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகள் முதல் இன்ஸ்பெக்டாகள் வரை முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கமான நபர்களை மட்டும் தான் பணியமர்த்தி இருந்தனர். மேற்கு மண்டலத்தில் அதிமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற இவர்களின் பங்கு மிகவும் முக்கியமாக இருந்தது. குறிப்பாக மேற்கு மண்டலத்தில் தொழிற்சாலைகள், ரியல் எஸ்டேட், சுற்றுலா தளங்கள் என அனைத்தும் உள்ளது. மேற்கு மண்டலத்தை முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோர் தங்களது காட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் தேர்தல் நேரத்தில் அதிமுக அரசுக்கு  ஆதரவாக செயல்பட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை பணியிடாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு மண்டலத்தில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர்கள் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று 67 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக மேற்கு மண்டலத்தில் பணியாற்றி வந்த 34 இன்ஸ்பெக்டர்களை தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம், மத்திய மண்டலத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் மற்ற மண்டலத்தில் இருந்து மேற்கு மண்டலத்திற்கு 33 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : AIADMK ,DGP ,Silenthrababu , 34 inspectors transferred in western region for supporting AIADMK rule: DGP Silenthrababu orders
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...