புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் பல்வேறு குளறுபடி: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் புகார்

காஞ்சிபுரம்: புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் பல்வேறு குளறுபடி உள்ளதாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு ஓய்வுபெற்றஅரசு ஊழியர் சங்க காஞ்சி மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் திருவேங்கடம் தலைமைதாங்கினார். மாவட்ட செயலாளர் பிச்சை லிங்கம் செயல் அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில், தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று கொண்ட ஆர்த்தி, எஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்ட சுதாகர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். குறிப்பாக புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் சுமார் 8 லட்சம் ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தில் மாதம் 350 வசூலிக்கப்படுகிறது.

அதில், பயனாளிகளுக்கு வழங்கும் தொகை சராசரியாக 20 சதவீதமே உள்ளது. இந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால், இட செலவினத்தை கண்காணிக்க, குழு ஒன்றை அரசு ஏற்படுத்த வேண்டும். அதில் ஓய்வூதியர் சங்க உறுப்பினர்களை இணைத்து, அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6 ஆயிரம் ஓய்வூதியர்கள் உள்ளனர். கொரோனா சிகிச்சை பெற்ற மருத்துவ செலவை 40க்கும் மேற்பட்டோர் மீண்டும் பெற முயற்சித்தபோது, யாரும் பெற முடியவில்லை. வரும் காலங்களில் இது போன்ற நிலையை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன  இதில், மாவட்ட பொருளாளர் சௌதாமாணி சத்தியசீலன் ,துணை தலைவர் அண்ணாமலை, தணிகாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>