ஸ்ரீகிருஷ்ணா கலை கல்லூரியில் இணையவழி கருத்தரங்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயிர்வேதியியல், வேதியியல் துறை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் நேரு யுவகேந்திரா காஞ்சிபுரம் சார்பில் “வேதிய தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகள்” என்ற தலைப்பில்  இணையவழி  கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி நிறுவனர்  கல்வி காவலர் பா.போஸ் தலைமைவகித்தார், உயிர்வேதியல் துறைத் தலைவர் முனைவர்.ப.புண்ணியக்கோட்டி வரவேற்றார். காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை   தாளாளர் .ஏ.அரங்கநாதன்  முன்னிலை வகித்தார்.

கல்லூரி முதல்வர் முனைவர் கு.வெங்கடேசன்  சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தியதுடன் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற போட்டித்தேர்வுகளுக்கு நன்றாக படித்து தன்னை தயார்படுத்தி கொண்டு, திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். தினமும் ஆங்கில நாளேடுகள், புத்கங்கள் படிக்கவேண்டும் என ஆலோசனைகள் வழங்கினார். கல்லூரி தலைவர் கே.வீரராகவன், செயலாளர் வி.மோகனரங்கம், பொருளாளர் எம்.செந்தில்குமார், கல்லூரி துணை முதல்வர் முனைவர் ம.பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த இணையவழி கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக தருமபுரி மாவட்டம், ஸ்ரீலுக் பெயின்ட்ஸ் நிறுவனர் ஜி.எம்.சீனிவாசன் கலந்துகொண்டு இணையம் வழியாக உயிர்வேதியியல் மற்றும் வேதியியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு ரசாயன தொழிற்சாலை களில் பணிபுரிய பலதரப்பட்ட வேலைவாய்ப்புகள் மற்றும் நேர்முக தேர்வில் எப்படி அணுகி வேலைவாய்ப்பை பெறுதல் ஆகியவை பற்றி பேசினார். நிகழ்ச்சியை நேரு யுவகேந்திரா காஞ்சிபுரம் மாவட்ட  இளையோர் அலுவலர் ஏ.சரவணன் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்தார். கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் காஞ்சனா, முனைவர்.இ.பேபி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். இறுதியில் வேதியியல் துறைத்தலைவர் பி.சில்வியா நன்றி கூறினார்.

Related Stories:

>