வாலாஜாபாத் பேரூராட்சியில் சுழற்சி முறையில் துப்புரவு பணிகள்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியின் 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சியில் ஒன்றிய அலுவலகம், கருவூல அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், மருத்துவமனை, வங்கிகள், காவல் நிலையம் உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படுகின்றன. வாலாஜாபாத் சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. வாலாஜாபாத் பகுதியில் தற்போது பெய்து வரும் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக, பேரூராட்சி நிர்வாகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதன்படி, பேரூராட்சியின் 15 வார்டுகளிலும் சுழற்சி முறையில் துப்புரவு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதையெட்டி, குப்பைகளை அகற்றுவது, கால்வாயில் தேங்கி நிற்கும்  தண்ணிரை அகற்றுவது, காலி இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றுவது உள்பட பல்வேறு பணிகள் சுழற்சி முறையில் நடந்து வருகிறது.

Related Stories: