×

திருவேற்காடு நகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சியில் கொரோனா, டெங்கு பரவுவதை தடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து திருவேற்காடு நகராட்சி ஆணையர் வசந்தி கூறியதாவது: திருவேற்காடு நகராட்சியில் பொது சுகாதாரப்பிரிவின் சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதே சமயம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீர், தேங்கியுள்ள மழை நீரில்தான் முட்டையிட்டு கொசுக்களை உற்பத்தி செய்யும். இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே வீடுகள், குடியிருப்புகள், காலி மனைகள், பழைய வாகனங்கள், மற்றும் தேவையற்ற பொருட்களில் மழைநீர் தேங்க வாய்ப்பு அதிகம் உள்ளது. பயன்பாடு இல்லாத வாகனங்களை அதன் உரிமையாளர்கள் உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும்.

அந்த வாகனங்களில் மழைநீர் தேங்கி டெங்கு, கொசுக்கள் முட்டையிட்டு வளர வாய்ப்பு உள்ளது. இதேபோல் வீடுகளைச்சுற்றி கிடக்கும் பிளாஸ்டிக்பொருட்கள், டயர்கள், தேங்காய் சிரட்டை போன்ற பல பொருட்களில் மழைநீர் தேங்கி, டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. எனவே மக்கள் உடனடியாக தங்கள் குடியிருப்பு பகுதிகளில் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். டெங்குகொசு உற்பத்தியை தடுக்க நகராட்சி நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். மழைநீர் தேங்கவும், டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாகவும் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என்றார். இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் உடனிருந்தார்.

Tags : Thiruverkadu municipality , Intensity of dengue eradication work in Thiruverkadu municipality
× RELATED திருவேற்காடு நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கண்காட்சி