தேர்வாய், கொள்ளனுர் ஊராட்சிகளில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள்: எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் பகுதியில் 1000 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்களை, எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார். கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய், கொள்ளனுர் ஆகிய ஊராட்சிகளில், ஊராட்சி தலைவர் முனிவேல், வெங்கடேசன் ஆகியோர் தலைமையில், அப்பகுதியை சேர்ந்த 1000 குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அரிசி, 15 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் மு.மணிபாலன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம், திமுக மாவட்ட நிர்வாகி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். திமுக ஒன்றிய துணை செயலாளர் திருமலை, ரமேஷ், பரத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>