×

மதுபாட்டில் கடத்தியவர்கள் மீது வழக்குப்பதியாத இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உள்பட 6 போலீசார் சஸ்பெண்ட்

திருவாரூர்:  திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் என்ற இடத்தில் திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஞானசுமதி தலைமையிலான போலீசார் கடந்த 2ம் தேதிவாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனை செய்தபோது, அவர்களது உடலில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் டேப் ரோல் மூலம் சுற்றப்பட்டு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் 2 பேரையும் விடுவித்ததாக வீடியோ ஆதாரம் ஒன்று மாவட்ட எஸ்.பி. சீனிவாசனுக்கு கிடைத்தது.

இதையடுத்து எஸ்.பி. உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், மது பாட்டில்களை கடத்தி வந்த 2 பேரிடமும் கையூட்டு பெற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்யாமல் விடுவித்தது தெரிய வந்தது. இதனால், இன்ஸ்பெக்டர் ஞானசுமதி, சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி, ஏட்டுகள் சண்முகசுந்தரம், ராஜா மற்றும் முதல்நிலை போலீசார் பாரதிதாசன், விமலா ஆகிய 6 பேரையும் சஸ்பெண்ட் செய்திட எஸ்.பி. சீனிவாசன், டி.ஐ.ஜி.க்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், 6 பேரையும் டிஐஜி பிரவேஷ்குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


Tags : Six policemen, including an inspector and an SI, have been suspended for not prosecuting those who smuggled alcohol
× RELATED வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல்...