×

தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: சிதம்பரத்தில் கே.எஸ்.அழகிரி பேட்டி

சிதம்பரம்: சிதம்பரத்தில் நேற்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- இந்தியாவின் ஜனநாயகத்திற்கும் குடியரசுக்கும், பாதுகாப்பிற்கும் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் நமது நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள், ஊடகங்கள் என சுமார் 300 பேரின் தொலைபேசி இணைப்புகள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இது நமது உள்துறை அமைச்சருக்கு தெரிந்திருக்கிறது. பிரதமருக்கு தெரிந்து இருக்கிறது. இந்த செயல் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர்  கூறினார்.

Tags : Home Minister ,Amit Shah ,KS Alagiri ,Chidambaram , Home Minister Amit Shah should resign over telephone tapping issue: KS Alagiri interview in Chidambaram
× RELATED தேர்தல் பிரச்சாரத்திற்காக...