×

ராஜஸ்தான், மேகாலயாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

பிகானேர்: இன்று அதிகாலை ராஜஸ்தான், மேகாலயாவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அம்மாநில மக்கள் பெரும் பீதியடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் இன்று அதிகாலை 5.24 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்தனர். தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி, ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் அளவு 5.3 ஆக அளவிடப்பட்டது. இருப்பினும், இதனால் எந்தவொரு உயிர் சேதமோ, உடைமை இழப்போ ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல், மேகாலயாவில் அதிகாலை 2.10 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. குறிப்பாக மேற்கு கரோ மலைகளில் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.8 ஆக இருந்தது. திங்கள்கிழமை அதிகாலை 3:37 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ராஜ்கோட்டின் தெற்கு பகுதியில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கு முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் காலை 10.12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி உக்ருலில் இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Meghalaya, Rajasthan , Early morning earthquake shakes Rajasthan, Meghalaya
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்